000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a வாயிற்காவலர் |
300 | : | _ _ |a பிற வகை |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கருவறை விமானத்தின் காவலராய் நிற்கின்ற வாயிற்காவலர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பீடத்தின் மீது சமபாதத்தில் இளைய வீரர் ஒருவர் நிற்கிறார். இவர் வாயிற் காவலர் ஆவார். மிகவும் பணிவுடன் இரு கைகளையும் குறுக்கேக் கட்டி உள்ளார். பூரிமத்துடன் விளங்கும் கரண்ட மகுடராய் தோற்றமளிக்கும் இவ்வழகிய இளைஞரை நோக்குங்கால், சோழர் குல இளவலாய்த் தோன்றுகிறது. ஆனால் அவர் வாயில் முன் நீண்டு காட்டப்பட்டுள்ள கோரைப் பற்களைக் காணுங்கால் இவர் வாயிற் காவலர் என்பதை அறிய முடிகிறது. சோழர் குல இளைஞர்களின் உடல் கட்டமைப்பிலும், ஆடையணிகளிலும் இந்த வாயிற் காவலர் காட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சடைக்கற்றை தலையின் இருபுறமும் பின்பக்கம் தெரிகின்றன. நெற்றியில் கண்ணும், நெரித்த புருவமுமாய் விளங்குகின்ற இக்காவலர் தங்கத் தகடுகளால் ஆன நெற்றிப்பட்டை அணிந்துள்ளார். கழுத்தில் சரப்பளி அணி செய்ய, காதுகளில் கனத்த பெரிய வளையங்கள் அணிந்துள்ளார். முப்புரி நூல் இடது தோள் வழியாக உடலின் பின்புறம் செல்கிறது. பிரம்மமுடிச்சு மார்பின் நடு மையத்தில் உள்ளது. இறுக்கிக் கட்டிய இடையாடையால் வயிறு சற்று பிதுங்கித் தெரிகின்றது. சிங்க முக முகப்புள்ள இடைவார்ப் பட்டையுடன் அரையாடை அணிந்துள்ளார் இவரின் இடைக்கட்டு முடிச்சு உடலின் பின்புறம் தெரிகிறது. கால்களில் பாடகம் அணிந்துள்ளார். இடது கால் சிதைந்துள்ளது. இரு அரைத்தூண்களுக்கிடையே அமைந்த கோட்டத்தில் இச்சிற்பம் அமைந்துள்ளது. |
653 | : | _ _ |a வாயிற்காவலர், காவல் வீரர்கள், துவாரபாலகர், காவலர் சிற்பம், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, குறங்கணி நாதர் கோயில், சீனிவாசநல்லூர் குறங்கணி நாதர் கோயில், சோழ மண்டலம் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a குறங்கணி நாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c சீனிவாசநல்லூர் |d திருச்சி |f லால்குடி |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 | : | _ _ |a 10.97344457 |
915 | : | _ _ |a 78.38864207 |
995 | : | _ _ |a TVA_SCL_000149 |
barcode | : | TVA_SCL_000149 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_000149_குறங்கணி-நாதர்-கோயில்_வாயிற்காவலர்-001.jpg | : |
![]() |
Primary File | : |